ஈராக், மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்துள்ள நிலையிலும் ஆப்கானிஸ்தானில் இன்னும் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஓயவில்லை. குறிப்பாக இந்த நாட்டில் ஐஎஸ் அமைப்பினர்களுக்கும் தலிபான் அமைப்பினர்களுக்கும் அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் காபூர் அருகேயுள்ள நான்கார்ஹர் மாகாணத்திற்குள் ஐ.எஸ் அமைப்பினர் நேற்று ஊடுருவி கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள் 15 ஐஎஸ் தீவிரவாதிகளை பிடித்து அவர்களுடைய தலைகளை ஒரே நேரத்தில் வெட்டித்தள்ளினர். இதனால் அந்நாட்டில் பெரும் பதட்டம் நிலவியுள்ளது.