முதலை கழுத்தில் டயர்; 6 ஆண்டு போராட்டத்திற்கு முடிவு!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:09 IST)
இந்தோனேஷியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் டயரோடு சுற்றி திரிந்த முதலையின் கழுத்திலிருந்து அந்த டயர் அகற்றப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி மாகாணத்தில் உள்ள பலூ நகர் ஆற்றில் முதலைகள் நிறைய வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு முதலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இருசக்கர வாகன டயரில் சிக்கிக் கொண்டது. அதன் கழுத்திலிருந்து டயரை விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றுபவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது. அதை தொடர்ந்து பலரும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் டயரை அகற்ற முடியவில்லை.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த டிலி என்பவர் கோழியை இரையாக வைத்து முதலையை பிடித்துள்ளார். பின்னர் உள்ளூர் மக்கள் உதவியுடன் முதலை கழுத்தில் சிக்கிய டயரை வெட்டி எடுத்து முதலையை மீட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்