இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பா! – சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம்!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:39 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம் அளித்துள்ளது.
நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பசிபிக் கடல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இதுபோல இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவில் வங்க கடலில் சுனாமி எழுந்தது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய சுனாமி எச்சரிக்கை இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு சுனாமி பாதிப்பு இருக்காது என்று விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்