ஜோத்பூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் மீரஜ் உள்ளிட்ட ராணுவ விமானங்கள் பல உள்ளன. இவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் அவ்வபோது அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறாக லக்னோ விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு தேவையான தளவாடங்கள் ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வாகனத்தில் இருந்து மீரஜ் ரக போர்விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை மட்டும் மர்ம கும்பல் திருடியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பக்ஷி தலாப் விமானப்படை தளத்தில் காணாமல் போன டயருடன் வந்த இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது திருட்டு சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலையில் இந்த டயர்களை கண்டதாகவும், லாரி டயர் என நினைத்து எடுத்து சென்றதாகவும் கூறியுள்ளனர்.