மருத்துவமனையில் தீ விபத்து: 4 குழந்தைகள் பலி

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:05 IST)
ஈராக் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.
 

இந்த மருத்துவமனையில் நேற்று மாலை  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில்  ஓரிடத்தில் பற்றிய தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் அறைகளுக்கும் உடனே பரவியது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், பல நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

ஆனால், சிலர் அக்கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.  20 க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.

மேலும், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த 150 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஈராக் பிரதமர், ‘இவ்விபத்தில் அலட்சியமாக செயல்பட்ட  அதிகாரிகளை பணி நீக்கம்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்