பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

Prasanth Karthick

வெள்ளி, 10 ஜனவரி 2025 (11:22 IST)

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு புதிய தண்டனை சட்டத்திற்கான மசோதா கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சமீபமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற கருத்து பொதுமக்களிடையே எழுந்து வருகிறது.

 

இதுகுறித்து ஆலோசித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

தற்போது சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர், வினா-விடை நேரம் முடிந்த பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்