பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. விசாரணை அறிக்கையில் தகவல்

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (17:31 IST)
ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல்  நடத்தினர். அப்போது, சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் காசாவுக்கு கொண்டு சென்றதாகத் தகவல் வெளியானது.
 

இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீதும் பாலன்ஸ்தீனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் தற்காலிய போர் நிறுத்தத்தின்போது பணயக்கைதிகள் பாதிப்பேரை விடுவித்தது. மீதிப் பேரை மீட்க இஸ்ரேல் படை, காசாவின் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலின்போது, ஷஜாயா நகரில் பணயக் கைதிகள் 3 பேர் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ''காசாவின் ஷஜாயாவில் ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த நிலையில் அந்த கட்டிடத்தை கடந்த 10 ஆம் தேதி இஸ்ரேல் ராணுவப் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது ஹீப்ரு மொழியில் பணயக் கைதிகள் உதவி கேட்டதை, ஹமாஸ் அமைப்பினர் செயயும் சூழ்ச்சியாக கருதிய நிலையில், தவறுதாக கொல்லப்பட்ட 2 பணயக் கைதிகள் சட்டையில்லாமல் இருந்தனர். ஒருவர் கையில் வெள்ளைக் கொடி இருந்தது'' என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்