பிரதமர் மோடி தமிழகம் வரும் பயணம் ஒத்திவைப்பு

Sinoj

சனி, 6 ஜனவரி 2024 (20:13 IST)
பிரதமர் மோடி 2 வது முறையாக தமிழ்நாடு வரும் பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ் நாடு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி விமான நிலையம் 1100 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள அந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார்.  பின்னர்,     பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணர்கள் மத்தியில் பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி 2 வது முறையாக தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதில், திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில்,  இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதுடன்,  திருப்பூரில் நடைபெறவுள்ள  பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வரும்  ஜனவரி 19 ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரதமரின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

வரும் 19 ஆம் தேதி பிரதமர் மோடி, தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்து வைக்கும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேதி மாற்றத்தினால் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டமும் பிரதமர் மருத்துவமனையை திறக்கும் நாளன்று நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்