கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் க்யூபா உள்ளிட்ட தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் க்யூபா மற்றும் ஜமைக்கா தீவுகளுக்கு இடையே 7.7 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா மற்றும் க்யூபாவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் க்யூபா, ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பிறகு சுனாமி அபாயம் நீங்கியதாக சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.