ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஹரியானா மாநிலம் கர்னாலில் பிறந்த 26 வயதுடைய இந்திய கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு திருமணமாகி 7 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பது கூடுதல் சோகம்.
வினய் நர்வால், திருமணம் ஆன சில நாள்களுக்குள், திருமண விடுப்பில் இருந்து காஷ்மீரில் இருந்தபோது இந்த தாக்குதலில் சிக்கியுள்ளார். அவரது திருமணம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்றது; ஏப்ரல் 19ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. குடும்பத்துடன் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.