உள்ளூர் ரயில்களில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்: அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (11:16 IST)
உள்ளூர் ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என ஸ்பெயின் நாட்டு அரசு தெரிவித்துள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஸ்பெயின் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் எழுந்து உள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்
 
இந்த நிலையில் பொருளாதார நிலையில் கஷ்டப்படும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது
 
அந்த வகையில் உள்ளூர் ரயில்களில் இலவச பாஸ் எடுத்து பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என ஸ்பெயின் நாட்டு ரயில்வே துறை தெரிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு என்று கூறப்படுகிறதே. அது மட்டுமின்றி மேலும் சில சலுகை அறிவிப்பையும் ஸ்பெயின் நாடு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்