பெண்கள் கருகலைப்பு உரிமை; நாடாளுமன்றத்தில் ஒப்புதல்!

Prasanth Karthick
புதன், 31 ஜனவரி 2024 (09:03 IST)
பெண்கள் கருகலைப்பு செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



கர்ப்பமான பெண்கள் கருவை கலைப்பது உலக அளவில் பல நாடுகளில் குற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக கருகலைக்கும் செயல்களும் நடைபெறுகின்றன. அதேசமயம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் கருகலைப்பு செய்வது தங்கள் உரிமை என பெண்கள் அமைப்புகள் பல போர்க் கொடி தூக்கி வருகின்றன.

அவ்வாறாக பிரான்சில் பெண்கள் கருகலைப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில் இதுகுறித்த சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது பெண்கள் கருகலைப்பு உரிமைக்கான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்ற கீழ்சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்து செனட் சபைக்கு அனுப்பப்பட்டு அங்கு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் சட்டமாக செயல்படுத்தப்படும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்