தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தலுக்கு பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், பா.ஜ.க. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக பேசி வருவது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, சமீபத்தில் அ.தி.மு.க.-வை சேர்ந்த ஒருவர்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா கூறியபோது, எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன், "தேர்தலுக்குப் பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்," என்று தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.