காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

Mahendran

சனி, 5 ஜூலை 2025 (13:59 IST)
பீகார் மாநிலத்தில், ஒரு காவல்துறை அதிகாரிக்கு ரூ.120க்கு பதிலாக ரூ. 720 மதிப்புள்ள பெட்ரோலை தவறுதலாக நிரப்பியதற்காக ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை அந்த அதிகாரி தாக்கியதாகவும், பதிலுக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்களால் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அவர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 120-க்கு பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த ஊழியர் தவறுதலாக ரூ. 720 மதிப்புள்ள பெட்ரோலை நிரப்பிவிட்டார். இதனால் கடும் கோபமடைந்த காவல்துறை அதிகாரி, ஊழியரை அறைந்துள்ளார். அதுவரை அமைதியாக இருந்த சூழல், இந்த அறைக்கு பிறகு தலைகீழாக மாறியது.
 
காவல்துறை அதிகாரி ஊழியரை அடித்ததை கண்ட பெட்ரோல் பங்க் மேலாளர் உட்பட மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த காவல்துறை அதிகாரியை தாக்க தொடங்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஊழியர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரியை நான்கு முதல் ஐந்து முறைக்கு மேல் அடிப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. மற்றொரு ஊழியரும் அந்த அதிகாரியை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்