இந்தோனேசியாவில் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் சுலவேசி பகுதிகயில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பாகன் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு கொண்டிருந்த சுரங்கத்தில் 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் வெளியிட்ட அந்நாட்டு பேரிடர் அமைப்பு, நேற்றிரவு கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் அங்குள்ள பாகன் பகுதியில் வசிப்பவர்கள் தொடர்ந்து, தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக தங்கத் தாதுக்களை தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நேற்று பெய்த மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.