டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட அளவு எழுத்துக்களை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையில் தற்போது அந்த எழுத்துக்களை அதிகப்படுத்த ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டுவிட்டர் இணையதளத்தில் அதிகபட்சமாக 250 எழுத்துக்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் சமீபத்தில் 44பில்லியன் டாலருக்கு வாங்கிய டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் எழுத்துக்களின் அதிகபட்ச வரம்பை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இதுவரை 280 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரு மடங்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏராளமான பயனர்கள் இது குறித்து கோரிக்கை வைத்துள்ள நிலையில் விரைவில் இந்த புதிய அப்டேட்டை எலான் மஸ்க் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது
ஏற்கனவே ப்ளூடிக் உள்ளவர்களுக்கு மாதம் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எழுத்துக்களுக்கான அதிகபட்ச உடம்பை வரம்பை உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது