மேலும் ட்விட்டரின் கொள்கை மற்றும் நெறிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய உள்ளடக்க மதிப்பாய்வு கவுன்சிலை அமைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த புதிய கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ட்விட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் தவறான தகவல்கள் வெளியிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் தங்கள் கணக்குகளை தொடங்குவதற்கு புதிய விதிமுறைகள் வாய்ப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.