ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து 48 சுற்றுலா தளங்களை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களோடு மக்களாக வாழ்ந்து பயங்கரவாதிகள் கலந்து சதித்திட்டங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பயங்கரவாதிகளால் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகள் கண்டறிந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், ரயில் நிலையம் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.