மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை வழங்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கை குறித்து திமுக அரசு பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
இது சம்பந்தப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விரைவில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.