அடே நண்பா.. உன்னை வெல்வேன்! – ட்விட்டருக்கு எதிராக புதிய செயலி!

திங்கள், 31 அக்டோபர் 2022 (11:54 IST)
பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், ட்விட்டருக்கு இணையான புதிய செயலியை உருவாக்கியுள்ளாராம் ட்விட்டரின் முன்னாள் தலைமை அதிகாரி.

உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் ட்விட்டர் வலைதளத்தை உலகின் பெரும் பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அதை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு சேவைகளுக்கும் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் உள்ள ப்ளூடிக் பிரபலங்கள் மாதம் ரூ.1600 ப்ளூடிக்கிற்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இதை தொடர்ந்து ட்விட்டருக்கு இணையான வேறு சமூக வலைதளத்திற்கு மாற பிரபலங்களும், சாதாரண பயனாளர்களும் விரும்புவதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை ட்விட்டரின் முன்னாள் தலைமை அதிகாரி ஜாக் டோர்சி பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ALSO READ: ஒரே நாளில் 1,326 பேர் பாதிப்பு; 8 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் ட்விட்டர் போன்ற வசதிகளுடன் கூடிய ப்ளூஸ்கை (Bluesky) என்ற புதிய செயலி மற்றும் சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது பீட்டா வெர்சன் டெஸ்ட்டிங்கில் உள்ளதாகவும் விரைவில் டெஸ்ட் முடிந்து பயன்பாட்டிற்கு இந்த செயலி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்விட்டருக்கு மாற்றாக ப்ளூஸ்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்