அதிக சொத்துகளை இழந்து கின்னஸ் சாதனை… இது என்னடா எலான் மஸ்க்குக்கு வந்த சோதனை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (09:44 IST)
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் இப்போது தனது சொத்துகள் பெரும்பாலனவற்றை இழந்துள்ளார்.

உலகப் பணக்காரர்களில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் எலான் மஸ்க். சமீபத்தில் கூட சமூக வலைதளமான ட்விட்டரை மஸ்க் வாங்கியது முதலாக அவரது செயல்பாடுகள் உலக அளவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், இனி ட்விட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது சொத்துகளின் பெரும்பகுதியை இழந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் அவரின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 137 பில்லியன் டாலராக அது குறைந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அதிக சொத்துகளை இழந்தவர் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்