அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதம்.. சவால் விடுத்த காயத்ரி ரகுராம்!

வியாழன், 5 ஜனவரி 2023 (10:02 IST)
அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என்றும் என்னுடன் விவாதம் நடத்த அண்ணாமலை தயாரா என்றும் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் 
 
அதிமுக திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் அவர் இணையதயார் என்று தெரிவித்திருந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்.
 
அந்த வகையில் சற்று முன் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த விரும்புகிறேன் என்றும் அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
நேற்று அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு குறித்து காயத்ரி ரகுராம் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் தற்போது திடீரென அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் அண்ணாமலை காயத்ரி ரகுராம் எங்கிருந்தாலும் அவர் நன்றாக இருக்கட்டும் என்று கூறி அவரது கேள்விகளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்