ரூ.646 கோடியில் சொகுசு விமானம் வாங்கிய எலான் மஸ்க்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (21:40 IST)
உலகின் நம்பர் 1 பணக்காரராகவும் அறியல் தொழில் நுட்பத்திலும், விண்வெளி ஆய்விலும் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கும் அதே சமயம் சமூக வலைதளங்களில் மக்களுடன் தொடர்பில் இருப்பவர் எலான் மஸ்க்.

இந்த நிலையில், சமீபத்தில், அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் ஒட்டுமொத்த உலக மக்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ப்ளூடிக்கிற்கு எட்டு டாலரை கட்டணமாகச் செலுத்த வேண்டுமென அவர் கூறியுள்ளது, டுவிட்டர் பயனாளிகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், இது உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

இந்த  நிலையில்,  மக்களுக்கு ஆச்சர்யமூட்டும்  இன்னொரு சம்பவம் செய்துள்ளார் எலான் மஸ்க்.அதாவது, ஜி700 என்ற ஜெட் விமானம் ஒன்றை தன் சொந்தப் பயன்பாட்டிற்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

இந்த விமானம் சுமார் 57 அடி  நீளமும், 7500 கடல் மைல்களை இடைவெளியின்றி பறக்கும் திறனுடையதாகவும் உள்ளதால் இதன் விலை ரூ.646  கோடி என்ற தகவல் வெளியாகிறது.
 இந்த ஜி700 விமானம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்