குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

Prasanth Karthick

வெள்ளி, 23 மே 2025 (15:36 IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுக முன்னாள் அமைச்சராகவும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. சமீபத்தில் அவரது சுகுணாபுரத்தில் உள்ள வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது கண்டு எஸ்.பி.வேலுமணி அதிர்ச்சியடைந்தார்.

 

அந்த கடிதத்தில், எங்கள் ஆட்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை வரும் 25ம் தேதி மதியம் கலியெப்பெருமாள் குட்டை அருகே உள்ள குப்பை மேட்டில் வைக்க வேண்டும். கேட்டபடி பணத்தை கொடுக்காவிட்டால், 3 மாதத்திற்குள் உங்களை, உங்கள் குடும்பத்தினரையும் குண்டு வைத்துக் கொல்வோம். இது எச்சரிக்கை என்று மிரட்டும் தோனியில் எழுதப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி சார்பில் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்