இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.
இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அவர்,
சமீபத்தின் ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்ட் துணை அதிகரி பில்கேட்ஸை பின்னுத்தள்ளி, உலகின் 4 வது மிகப்பெரிய கோடீஸ்வரரானார்.
தற்போது, பிரான்சிஸ் பெர்னார்ட் அர்னால்ட் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி 3 வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், 2 வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப்பெகாசும் உள்ளனர்.