10 வருட ஆயுளை பறிகொடுக்க போகும் டெல்லி வாழ் மக்கள் - ஏன் தெரியுமா?

புதன், 15 ஜூன் 2022 (10:05 IST)
இந்தியாவில் காற்று மாசு குறித்து, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம்  ஆய்வு நடத்தியுள்ளது. 

 
உலகம் முழுவதும் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள வாகனங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் புகை, தொழிற்சாலை புகை என நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
 
காற்று மாசால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் நாடுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் காற்று மாசு குறித்து, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்றின் தர வாழ்க்கையின் எரிசக்தி கொள்கை நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. 
 
இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக டெல்லியில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை விட 21 மடங்கு காற்று மாசுபாடு அதிகமாகவுள்ளது. தற்போதைய காற்று மாசு அளவு தொடர்ந்தால், டெல்லிவாசிகள் 10 வருட ஆயுட்காலத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்