உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.எஸ். ஓகா, இன்று தனது கடைசி பணிநாளை நிறைவு செய்தார். ஆனால், மரபை மீறி, அந்த நாளில் கூட 10 வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்களுக்கு முன் தனது தாயார் வசந்தி ஓகா காலமான போதும், கடமை உணர்வால் பணிக்கு திரும்பிய ஓகா, நேற்று இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, இன்று நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு தீர்ப்புகளை வழங்கினார். இது அவரது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.
பின்னர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் அமர்வுக்கு வந்த ஓகா, "பணி ஓய்வுநாளில் எந்தப் பணியும் கொடுக்கக்கூடாது என்ற மரபை நான் ஏற்கவில்லை. வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியதில் திருப்தி அடைகிறேன்" எனப் பகிர்ந்தார்.