கேபிள் டி.வியில் வெளியான தர்பார் படம் ....! ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (17:27 IST)
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் சமீபத்தில்  திரைக்கு வந்த படம் தர்பார். இந்தப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஒன்றில் இப்படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் தர்பார் படம் ரிலீசானது. இப்போதும் இப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், நேற்று இரவு மதுரையில் உள்ள திருமங்கலம் பகுதியில் உள்ளூர் கேபிளில் இப்படம் ஒளிபரப்பியதாகத் தெரிகிறது.
 
இதகுறித்து லைக்கா நிறுவனம் சார்பில் மதுரை மாநகரம் காவல்துறை ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து போலீஸார்,  திருமங்கலம் பகுதியில் உள்ளூர்  கேபிள் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்