யப்பா தமிழ் இயக்குனர்களா.... இனிமேல் இப்படி IAS ,IPS'ன்னு படம் எடுக்காதீங்க - பங்கமாக கலாய்த்த கலெக்டர்!

சனி, 11 ஜனவரி 2020 (18:55 IST)
ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கிண்டலடித்து ட்விட் செய்துள்ளார். கடந்த திருநெல்வேலியை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் என்பவர் தர்பார் படம் வெளிவந்த முதல் நாள் படத்தை ட்விட்டரில் "  நாலு நாள்ள தலைவன ஃபிட்னஸ் நிரூபிக்க வச்சது தான்யா மிகப் பெரிய ஹூமன் ரைட் வைலேஷன்" என கூறி படத்தை பங்கமாக கலாய்த்திருந்தார்.  
அதையடுத்து தற்போது மீண்டும் தந்து ட்விட்டர் பக்கத்தில் "ஐயா, டேய் தமிழ் 
இயக்குனர்களா...இனிமே இந்த IAS ,IPS பின்புலம்  வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது" எனக்கூறி கிண்டலடித்து தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
இவரது இந்த ட்விட்டர் பதிவு இணையத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு செம்ம வைரலாகியதால்...யார் இந்த  அலெக்ஸ் பால் மேனன் என ஆராய்ந்து பார்த்ததில், இவர் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில்  ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்த போது மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டவர். பின்னர் பல அரசியல் தலைவர்களர் மத்திய அரசிடம் வலியுறுத்தி 12 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாவோயிஸ்ட்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்