மலையில்... 820 அடி உயர விளிம்பில் தொங்கிய ஆஸ்திரிய வீரர் !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (16:58 IST)
தாய்லாந்து நாட்டில்  பாராசூட்டில் பறந்து கொண்டிருந்த ஒரு வீரர், அங்குள்ள செங்குத்துப் பாறையின் உச்சியில்  சிக்கிக் கொண்டார். அவரை மீட்க மீட்புப் படையினர் பெரும் சிரமம் மேற்கொண்டனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாலுங் மாகாணத்தில் தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போதும், ஸ்கை டைவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,   ஆஸ்திரிய வீரர்கள் ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.
 
அவர்களில் ஒருவரான ஜோகன்னஸ் கிராசரின் என்பவர் பாராசூட்டில் பறந்து சென்றபோது, ஒரு செங்குத்தான மலையுச்சியில் சிக்கிக் கொண்டார்.
 
மலை அடிவாரத்தில் இருந்து  820 உயரத்தில் ஆபத்தான முறையில் சிக்கிக் கொண்டிருந்த  வீரரை ஜோகன்னஸ் கூச்சலிட்டார். அதைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்