கன்னி வெடிகளை கண்டுபிடித்த அதிசய எலி இறந்தது! – கம்போடியா மக்கள் சோகம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:36 IST)
கம்போடியாவில் கன்னி வெடிகளை கண்டுபிடித்து மக்களை காப்பாற்றிய மகாவா என்ற எலி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவில் 1991 தொடங்கி 7 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தின்போது பல்வேறு பகுதிகளில் கன்னி வெடிகள் புதைக்கப்பட்டன. போர் முடிந்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் கன்னிவெடிகளை கண்டறிந்து அகற்றுவது சிரமமான காரியமாக உள்ளது. உலகிலேயே அதிகமான கன்னி வெடிகள் புதைந்து கிடக்கும் நாடுகளில் கம்போடியா முக்கிய இடத்தில் உள்ளது.

இதனால் பல இடங்களில் திடீரென கன்னிவெடி வெடித்து பல உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் தொடர்ந்து வந்தன. இந்நிலையில்தான் கன்னிவெடிகளை கண்டுபிடிப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மகாவா என்ற எலி ஈடுபடுத்தப்பட்டது. தான்சானியாவில் பிறந்த மகாவா கம்போடியாவில் 2016 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 100க்கும் அதிகமான கன்னிவெடிகளை கண்டறிந்து மக்களை காப்பாற்றியுள்ளது. தற்போது ”ஹீரோ எலி”யான மகாவா உயிரிழந்துள்ளதற்கு உலகம் முழுவதிலிருந்தும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்