லதாமங்கேஷ்கரின் உடல் நிலையைக் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்தர் மோடி .

செவ்வாய், 11 ஜனவரி 2022 (19:09 IST)
பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நிலையைக் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்தர் மோடி  .
 
இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்தியாவில் பாடகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் லதா மங்கேஷ்கர் கொரொனா காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம்  கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திரமோடி.

பாடகி லதா மங்கேஷ்கர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்