சீனாவில் முழுவதும் பற்றி எரியும் மிகப்பெரும் கட்டிடம்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:58 IST)
சீனாவின் ஹூனான் பிராந்தியத்தில் பல அடுக்கு கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் முழுவதுமாக பற்றி எரியும் காட்சி பார்ப்போரை கதிகலங்க செய்துள்ளது.

சீனாவின் ஹூனான் பிராந்தியத்தில் சாங்சா நகரில் சீனா டெலிகாம் நிறுவனத்திற்கு சொந்தமான 30க்கும் அதிகமான தளங்கள் கொண்ட மிகப்பெரும் கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் அலறியடித்து ஓடிய நிலையில் மேலும் பலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

ஆனால் வெறும் 20 நிமிடங்களுக்குள்ளேயே தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவி சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த கட்டிடடமும் மொத்தமாக பற்றி எரிந்து வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றனர். இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்