சீனாவில் நில நடுக்கம்.....பலி எண்ணிக்கை 74 பேராக உயர்வு

புதன், 7 செப்டம்பர் 2022 (21:12 IST)
சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தின் கன் ஜி திபெத்திய  பகுதிக்கு உட்பட்ச லூடிங் கவுன்டி என்ற பகுதியில் இன்று மதியம்  மணியவில்  6.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இதனால், அங்குள்ள வீடு, கட்டிடங்கள் அதிர்ந்து, குலுங்கியது. இது அங்குள்ளோர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நில நடுக்கத்தால்,  பெரிய கற்களும், வீடுகள், அடுக்குமாடிகள் இடிந்து சாலையில்  
விழுந்தன. இதனால், அங்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மின் இணைப்புகள் துண்டிகக்ப்பட்டுள்ளது, மீட்புப் படையினர் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  சுமார் 74  பேராக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்தப்பகுதியைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேறிடத்திற்கு  புலம் பெயர்ந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,2.1 கோடி மமக்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்