உலகின் 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியா!

சனி, 3 செப்டம்பர் 2022 (13:34 IST)
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா  உலகின் 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது.

நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வரும்  நிலையில், வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என உறுதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  சர்வதேச  நிதியம் எனப்படும் ஐஎம் எஃப் டாலர் மதிப்பீடு அளவி ஒரு பொருளாதாரவளர்ச்சிக் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா 5 வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டா  நாடாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

எனவே, இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்து வருவதாகவும்,இந்த ஆண்டின் காலாண்டின் படிம் பிரிட்டன் பொருளாதாரத்த்தைக்( 814 பில்லியன் டாலர்) காட்டிலும், இந்தியாவின் பொருளாதாரம்(854.7 பில்லியன்) டாலராக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பொருளாதாரம் என்பது இந்த ஆண்டில் 7%  உயரும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்