மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள பெரும் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஜப்பான், தைவான், சீனா உள்ளிட்ட நாடுகள் அலர்ட் நிலையில் உள்ளன.
புயல் எண் 11 அபாயம் கொண்டதான ஹின்னம்னோர் கரையை கடக்கும்போது 270 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் வடக்கே நகர்ந்து ஜப்பான், தைவான், சீனாவின் கிழக்கு பகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று நாடுகளிலும் விமான சேவை, கப்பல் மற்றும் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் ஆயத்தாமாக் உள்ள நிலையில் பேரிடர் மீட்பு பணியில் ராணுவம், போலீஸ் என பலரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.