நீங்க இஷ்டத்துக்கு சட்டம் போட ஐ.நா எதற்கு? – மறைமுகமாக சாடிய ஜின்பிங்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:32 IST)
அமெரிக்கா, சீனா இடையே பொருளாதாரரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சீன அதிபர் அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரரீதியான மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஐ.நாவில் சீனாவின் இருக்கையை சட்டப்பூர்வமாக மீட்டெடுத்த 50வது நினைவு தினத்தில் பேசிய சீன அதிபர் ஜின்பிங் ”ஐ.நா சபையின் அதிகாரத்தையும், நிலைபாட்டையும் நாம் உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். சர்வதேச விதிகளை ஐ.நாவில் உள்ள 193 நாடுகளும் சேர்ந்துதான் உருவாக்க முடியும். தனிப்பட்ட நாடுகள் அல்லது கூட்டமைப்புகளால் உருவாக்க முடியாது” என மறைமுகமாக அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளை விமர்சித்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்