தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

Siva

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (13:06 IST)
காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
குறிப்பாக இந்தியாவில்  தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, அவர்களின் விசா வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். மருத்துவ தேவைக்காக வந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக 29-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்புக்கு ஏற்ப, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் மீது கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் விவரங்கள் காவல்துறையால் திரட்டி வரப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 200 பாகிஸ்தான் குடிமக்கள் தங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
 
29-ந்தேதி கடந்தும் இந்தியாவில் தங்கும் பாகிஸ்தானியர்கள் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, எதிர்கால தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்