இந்தியாவில் சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றது போராளிகள் அல்ல, பயங்கரவாதிகள் என்றும், இந்த அளவுக்கு தவறான தலைப்பை எப்படி ஒரு நாளிதழ் வெளியிடலாம்? என்றும் அமெரிக்கா கேள்வி எழுப்பி உள்ளது.
போராளிகள் என்றால் ஒரு விஷயத்திற்காக கடுமையாக போராடுபவர்கள். ஆனால், பயங்கரவாதிகள் என்றால் ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள், அப்பாவி மக்களை தாக்குபவர்கள். எனவே, போராளிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இந்த டைட்டில் போட்டது தவறு. உங்களுக்காக நாங்கள் தவறை சரி செய்து கொள்கிறோம், இது போராளிகள் தாக்குதல் அல்ல, தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், தீவிரவாதம் என்றால் அது தீவிரவாதமே. இந்த விஷயத்தில் நியூயார்க் டைம்ஸ் யதார்த்தத்தில் இருந்து விலகிவிட்டது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.