திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

Mahendran

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (13:33 IST)
திருமணம் செய்தபோது மணமேடையில் இருந்த பெண் ஒருவராகவும், முதலிரவுக்கு வந்த பெண் வேறொருவராகவும் இருந்ததை பார்த்து, மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்து சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில், கமல் என்பவர் தனக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் மீண்டும் என புரோக்கரிடம் கூறிய நிலையில், புரோக்கர் ஒரு இளம் பெண்ணை காட்டினார்.  கமலுக்கு அந்த பெண்ணை பிடித்து விட்டது. உடனடியாக இருவருக்கும் திருமண வேலைகள் நடந்து, திருமணமும் முறைப்படி நடந்தது.
 
ஆனால் முதலிரவின்போது, வந்த பெண்ணை பார்த்து கமல் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், தான் தாலி கட்டிய பெண் வேறாகவும், தற்போது முதல் இரவுக்கு வந்த பெண் வேறாகவும் இருந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
 
இதனை அடுத்து, அந்த பெண் தப்பி போட முயன்ற போது, அவரை பிடித்த கமல், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு, போலீசார் விசாரணை செய்தனர்.
 
அப்போது, இளம் பெண்  ஒருவரை காட்டி திருமணம் செய்ய வைத்து, அதன் பின் முதலிரவு அறைக்கு வேறொருவரை அனுப்பி, மாப்பிள்ளைக்கு பாலில் மயக்கம் மருந்து கொடுத்து, வீட்டில் உள்ள பொருட்களை திருட இந்த கும்பல் முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
 
இதனை அடுத்து, புரோக்கர் மற்றும் திருமணம் செய்த பெண், முதலிரவுக்கு வந்த பெண் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்