துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

Siva

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (13:19 IST)
ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ரவி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வந்திருந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆளுநர் மாளிகை இதனை மறுத்துள்ளது. ’வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசிடம் இருப்பதாகவும், பல்கலைக்கழகங்களில் வேந்தர் ஆளுநர் தான்’ என்றும் கூறியிருந்தது.
 
இந்த நிலையில், இன்றும் நாளையும் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
மொத்தம் உள்ள 41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டுமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
’துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி, கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது’ என மிரட்டி இருப்பதாக ஆளுநர் ரவி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்