கொரோனா தொற்றாளர்களை இரும்பு பெட்டி முகாமுக்குள் அடைக்கும் சீனா… வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:26 IST)
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றன. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

கொரோனாவின் பிறப்பிடமாக அறியப்பட்ட சீனா மற்ற நாடுகளை விட வெற்றிகரமாக அதை சமாளித்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் தப்பித்தது. ஆனால் இப்போது மீண்டும் வூகான் உள்ளிட்ட மாகாணங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறதாக சொல்லப்படுகிறது. விரைவில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் நடக்க உள்ளதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிறிய இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்துவதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மிகச்சிறிய இரும்பு பெட்டிகளை வரிசையாக அமைத்து அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாய தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்துவதாக கண்டனங்களும் எழுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்