ரெஜினாவின் கவர்ச்சி நடனப் பாடலுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

வியாழன், 13 ஜனவரி 2022 (09:59 IST)
ஆச்சார்யா படத்தில் ரெஜினா கவர்ச்சி நடனம் ஆடிய சானா கஷ்டம் என்ற பாடல் ஹிட்டாகியுள்ளது.

சமீபத்தில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் வைரல் ஹிட்டானது. ஆனால் அந்த பாடல் வரிகளுக்காக ஆந்திராவில் ஆண்கள் நீதிமன்றம் எல்லாம் சென்று வழக்கு தொடர்ந்தார்கள். அதுவே படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது.

இந்நிலையில் அதே போல கவர்ச்சி பாடல் ஒன்று சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இடம்பெற்றுள்ளது. சானா கஷ்டம் என்ற பாடலுக்கு ரெஜினா நடனமாடியுள்ளார். இந்த பாடலில் வரும் வரி ஒன்றில் ‘இளைஞர்கள் மருத்துவர்களாக ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் அழகான நடிகைகளை தொட்டு சிகிச்சை அளிக்கமுடியும்’ என்ற பொருளில் வருவதால் மருத்துவர்கள் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்