மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (10:53 IST)
தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
கனமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் இன்றும் நாளையும் கன மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வங்ககடலில் நவம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நவம்பர் 16-ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்