அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth K

ஞாயிறு, 8 ஜூன் 2025 (14:49 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பொழிவு இருந்து வரும் நிலையில் ஜூன் 10 முதல் 13ம் வரையிலும் தமிழ்நாட்டில் மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 10) வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

 

ஜூன் 11ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

 

ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்