தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பருவமழையால், சென்னையில் பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென் காசி, விருது நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், ராம நாதம்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.