10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம்!

ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:40 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக பல பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து வந்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களின் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்