சரக்கு பாட்டில் போல இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் வாசகம்! – கனடா அரசு முடிவு!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (08:58 IST)
மதுபான பாட்டில்களில் இருப்பது போல ஒவ்வொரு சிகரெட்டில் எச்சரிக்கை வாசகம் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இளைஞர்களிடையே சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. சிகரெட் புகைப்பதினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலையிலும் இளைஞர்கள் சிகரெட் புகைப்பது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் சிக்ரெட் பாக்கெட்டின் மீது சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அச்சிட்டு வருகின்றன. தற்போது கனடா ஒருபடி மேலே போய் இளைஞர்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட் துண்டிலும் இந்த வாசகங்களை அச்சிட முடிவு செய்துள்ளது. எத்தனை முறை அச்சிட்டாலும் அதை படித்து புகைப்பதை மக்கள் விட்டுவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்