சிகரெட் பத்த வைத்த பைலட்... விமானமே எறிந்து கடலில் விழுந்த சோகம்

சனி, 30 ஏப்ரல் 2022 (07:57 IST)
2016 எகிப்து விமானம் ஒன்று மத்தியதரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

 
கடந்த 2016 ஆம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கி சென்ற எகிப்து விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. 
 
இந்த விபத்துக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலயில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மர்ம விபத்துக்கு விடை கிடைத்துள்ளது. ஆம், எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விமானி சிகரெட் பிடிக்க லைட்டரை பற்ற வைத்த போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்ஸிஜன் கசிந்தது. இதனால் விமானியின் அறையில் தீ பரவியுள்ளது, இது அப்படியே விமானம் முழுவதும் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்