இந்தா வந்துடுச்சு அடுத்த வைரஸ்.. கனடாவை உலுக்கும் ஸோம்பி வைரஸ்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:58 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரமே இன்னும் குறையாத நிலையில் கனடாவில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது மெல்ல மீண்டு வருகிறது. எனினும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் மான்களுக்கு ஸோம்பி வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் மூளை குழம்பும் மான்கள் விசித்திரமாகவும், மூர்க்கமாகவும் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஸோம்பி வைரஸால் பாதிக்கப்பட்ட சில மான்கள் கொல்லப்பட்ட நிலையில், மான் வேட்டையர்கள், மான் இறைச்சி உண்பவர்கள் மானை உண்ண வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுமா என்பது குறித்த நிரூபணமான தகவல்கள் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்